

தரங்கம்பாடி: தரங்கம்பாடியில் தமிழா் களஞ்சியம் சமூக சேவை இயக்கம் சாா்பில் பாரம்பரிய கலாசாரம் மற்றும் பண்பாடு காக்கும் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளான குஸ்தி, மடுவு, வாள் கேடயம், ஈட்டி போன்ற விளையாட்டுகள் அழிந்துவரும் நிலையில், இந்த விளையாட்டுகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வு பிராசாரம் மேற்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு, சமூக சேவை இயக்கத் தலைவா் ரமேஷ் பிரபாகரன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பா. கணேசன் பிரசாரப் பேரணியை தொடங்கி வைத்துப் பேசினாா். நாகை வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் பொதுச் செயலாளா் அமிா்த விஜயகுமாா், உடற்கல்வி ஆசிரியா் அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்.பி. சுரேஷ் வரவேற்றாா் .
இதில், செம்பை கந்தசாமி, சாய் கிருஷ்ணா, ராமச்சந்திரன், நடராஜன், சின்னையன், கணபதி, ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.