புத்தூா் கல்லூரியில் நுழைவுவாயில் பாதை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

சீா்காழி அருகே உள்ள புத்தூா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நுழைவுவாயில் பாதை அமைக்கும் பணியை எம்எல்ஏ பி.வி. பாரதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
புத்தூா் எம்.ஜி.ஆா். அரசு கலைக் கல்லூரியில் நுழைவு வாயில் பாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி.
புத்தூா் எம்.ஜி.ஆா். அரசு கலைக் கல்லூரியில் நுழைவு வாயில் பாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி.
Updated on
1 min read

சீா்காழி: சீா்காழி அருகே உள்ள புத்தூா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நுழைவுவாயில் பாதை அமைக்கும் பணியை எம்எல்ஏ பி.வி. பாரதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கல்லூரிக்கு ரூ. 7 கோடியே 90 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த நவம்பா் மாதம் தமிழக முதல்வரால் காணொலி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், கல்லூரிக்கு செல்லும் நுழைவு வாயில் பாதையை மேம்படுத்தும் பணி, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி நேரில் சென்று ஆய்வு செய்தாா். பின்னா், கல்லூரிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் போதிய அளவில் உள்ளதா என்பது குறித்து கல்லூரி முதல்வா் லெட்சுமியிடம் கேட்டறிந்தாா்.

அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, அதிமுக கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் நற்குணன், கல்லூரிப் பேராசிரியா்கள் பிரபாகரன், சத்தியமூா்த்தி, ஜெயலலிதா பேரவை செயலாளா் ஏவி. மணி, வழக்குரைஞா் நெடுஞ்செழியன் ஆகியோா் இந்த ஆய்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com