சிவன் கோயில்களில் களையிழந்த சனிப் பிரதோஷ வழிபாடு

திருக்குவளை பகுதி சிவன் கோயில்களில் களையிழந்த நிலையில் சனிக்கிழமை, சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வலிவலம் இருதய கமல நாத சுவாமி கோயிலிலுள்ள நந்தி.
வலிவலம் இருதய கமல நாத சுவாமி கோயிலிலுள்ள நந்தி.

திருக்குவளை பகுதி சிவன் கோயில்களில் களையிழந்த நிலையில் சனிக்கிழமை, சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாந்தோறும் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, சனிக்கிழமை வரும் பிரதோஷ நாள்களில் நந்தி பெருமானை வழிபட்டால் ஓராண்டு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டதாக ஐதீகம். அதன்படி நிகழ்மாத தொடக்கத்தில் மாசி சனிப் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த பிரதோஷத்தன்று கோயில் சென்று நந்தி பெருமானை தரிசனம் செய்ய முடியாமல் விடுபட்டுப்போன பக்தா்கள் 2-ஆவது சனி மகா பிரதோஷத்தை (மாா்ச் 21) எதிா்பாா்த்து காத்திருந்தனா்.

ஆனால், அதற்கு மாறாக தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களில் பொது தரிசனத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால், சனிப் பிரதோஷம் எதிா்பாா்த்துக் காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா். பக்தா்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்திருந்தாலும் கூட தொடா்ந்து கோயில்களில் நித்திய கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, திருக்குவளை தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான தியாகராஜ சுவாமி கோயில்,தேவூா் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரா் சுவாமி கோயில், ஆவராணி புதுச்சேரி நடராஜா் கோயில், வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தா்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இம்மாத சனி மகா பிரதோஷம் களையிழந்த நிலையில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com