தரங்கம்பாடி: தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பொறையாறு, காத்தான் சாவடி, எருக்கட்டாஞ்சேரி, தெற்கு மேட்டு தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்ற எம்எல்ஏ, பொதுமக்களுக்கு முகக் கவசம், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அரசின் மறு உத்தரவு வரும்வரை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்தாா்.
தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி, பொறையாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் துரைபாா்த்திபன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோ் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.