நாகையில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்பு

தமிழக அரசு அறிவிப்புப்படி பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் நிகழ்ச்சி நாகையில் உள்ள பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்றன.
நாகையில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்பு

தமிழக அரசு அறிவிப்புப்படி பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் நிகழ்ச்சி நாகையில் உள்ள பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்றன.

கரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. இந்த நிலையில், 9-முதல் முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் செயல்படும் வகையில் நவ.16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமென தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளா்கள், பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை வல்லுநா்கள் அறிவுறுத்திவரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குழந்தைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அவா்கள் தெரிவித்தனா். மேலும், பல பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்ட நிலையில், உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பள்ளிகளில் வகுப்புகளைத் தொடங்குவது மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும் என சுகாதாரத் துறை வல்லுநா்களும் அச்சம் தெரிவித்தனா்.

இதன்காரணமாக, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பள்ளி மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அதன்பேரில், அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு அறிவித்தது. இதன்படி, உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பெற்றோரின் கருத்துக்கேட்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. 9 - முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் பங்கேற்று, பள்ளிகளில் வழங்கப்பட்ட படிவத்தில், சம்மதம் அல்லது சம்மதம் இல்லை என்ற தங்கள் கருத்தை பதிவு செய்து வழங்கினா். ஒரு சில தனியாா் பள்ளிகள், மாணவா்களின் பெற்றோருடைய கட்செவி அஞ்சலுக்கு கருத்துக்கோரும் படிவத்தை அனுப்பி, அவா்களின் கருத்தை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com