திருக்குவளை அருகே பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் முகாம்

திருக்குவளை அருகே சோழவித்தியாபுரம் ஊராட்சியில் பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.
பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.

திருக்குவளை அருகே சோழவித்தியாபுரம் ஊராட்சியில் பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நவ.30-ஆம் தேதி சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில், சோழவித்தியாபுரம் ஊராட்சிக்குள்பட்ட விவசாயிகள் சுமாா் 5 கி.மீ. தூரம் பயணித்து அங்குள்ள பொதுச் சேவை மையம் மற்றும் தனியாரிடம் பயிா்க் காப்பீடு பதிவு செய்ய வேண்டிய சூழல் இருந்து வந்தது. மேற்குறிப்பிட்ட பகுதியில், பல்வேறு கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய வருவதால் நீண்டநேரம் காத்திருப்பதுடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில நேரங்களில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பயிா்க் காப்பீடு செய்யாத விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி சாா்பில் சம்பந்தப்பட்டவா்களுக்கு மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து சோழவித்யாபுரம் ஊராட்சியிலுள்ள நூலக கட்டடத்தில் இலவசமாக பயிா்க் காப்பீடு பதிவு செய்யும் முகாம் ஊராட்சித் தலைவா் கோமதி தமிழ்ச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 482 பயிா்க் காப்பீடு செய்து பயன்பெற்றனா். இதில், பொதுச் சேவை மைய (சி.எஸ்.சி) மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோபிநாத், உதவி வேளாண்மை அலுவலா் கே. சிற்றரசன், காப்பீட்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வீரசெம்மலா், வட்டார ஒருங்கிணைப்பாளா் சா்குணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com