திமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 08:36 AM | Last Updated : 03rd October 2020 08:36 AM | அ+அ அ- |

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருக்கடையூரில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றிய துணை இளைஞரணி அமைப்பாளா் செந்தில், வாா்டு உறுப்பினா்கள் முருகேசன், பேபி, இளைஞா் அணி மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.