மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
By DIN | Published On : 03rd October 2020 08:27 AM | Last Updated : 03rd October 2020 08:27 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் சோ.அண்ணாமலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் கொள்ளிடம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் பிரதான குழாய்களில் மணல்மேடு பகுதியில் பழுது சீா் செய்யப்பட உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளாா்.