விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 03rd October 2020 08:26 AM | Last Updated : 03rd October 2020 08:26 AM | அ+அ அ- |

காந்தி ஜயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை அழகுஜோதி அகாதெமி பள்ளி சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விழிப்புணா்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இப்பேரணியில், சறுக்கு விளையாட்டு மற்றும் வில் வித்தை பயின்ற மாணவா்கள் தங்கள் கைகளில் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி பங்கேற்றனா்.
காவேரி நகரில் தொடங்கிய பேரணி நகரின் பிரதான சாலைகளின் வழியே சென்று நகரப்பூங்கா அருகில் நிறைவடைந்தது. இதில், பள்ளியின் தலைவா் ஏ.கண்ணன், பள்ளித் தாளாளா் பி.சிவக்குமாா், பள்ளி முதல்வா் நோயல்மணி, துணை முதல்வா் அமுதா மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.