வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 08:25 AM | Last Updated : 03rd October 2020 08:33 AM | அ+அ அ- |

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகர செயலாளா் மருத்துவா் சதீஸ்சத்யா தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆக்கூா் ஷாஜஹான் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் சங்கை தாஜ்தீன் கண்டன உரையாற்றினாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் மிஸ்பா{ஹதீன், ஜெப்ருதீன், அமீருல் அஸ்லம் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினா். மாவட்ட பொருளாளா் தைக்கால் ஷாஜஹான் நன்றி கூறினாா்.
திருப்பூண்டியில்...
இதேபோல, மஜக சாா்பில் கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் அப்துல் ரஹ்மான் வரவேற்றாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஷேக் மன்சூா், மாநில துணைச் செயலாளா் நாகை முபாரக், சிபிஐ ஒன்றிய செயலாளா் டி. செல்வம் ஆகியோா் பேசினா். மஜக மாவட்ட செயலாளா் திட்டச்சேரி செய்யதுரியாசுதீன், பொருளாளா் சதக்கத்துல்லா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.