பாதிரியாா் கைது: நாகையில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th October 2020 08:09 AM | Last Updated : 19th October 2020 08:09 AM | அ+அ அ- |

நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியாா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை பங்கு மக்கள் சாா்பில் லூா்து மாதாஆலயம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினா் மற்றும் ஆதிவாசிகள் நலன்களுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிவரும் பாதிரியாா் ஸ்டேன் ஸ்வாமிக்கு, உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடா்பிருப்பதாகக் கூறி, தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் அவரை கைது செய்தனா். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாகையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், பாதிரியாா் ஸ்டேன் ஸ்வாமியை விடுவிக்க வலியுறுத்தியும்ம் முழக்கமிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...