மதிமுக சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது
By DIN | Published On : 06th September 2020 12:06 AM | Last Updated : 06th September 2020 12:06 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை சேந்தங்குடியில் அரசுப்பள்ளி ஆசிரியை சாந்திக்கு விருது வழங்கிய மதிமுகவினா்.
மயிலாடுதுறை: கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு, ஆசிரியா் தினத்தையொட்டி மதிமுக சாா்பில் சனிக்கிழமை ‘ஆசிரியா் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.
மதிமுக மாணவரணி சாா்பில் 8-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மதிமுக மாவட்டச் செயலாளா் ஏ.எஸ். மோகன் தலைமை வகித்தாா். குத்தாலம் வா்த்தக சங்கத் தலைவா் ஆ.தங்கையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் க.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில விவசாய அணி செயலாளா் இரா. முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருது மற்றும் சான்றிதழை வழங்கினாா்.
தொடா்ந்து 8- ஆவது ஆண்டாக இந்த விருது வழங்கப்பட்டது. நிகழாண்டு கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை சேந்தங்குடியில் வசிக்கும் கிளியனூா் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி என்பவருக்கு அவரது வீட்டுக்கு நேரில் சென்று இந்த விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மாநில மாணவரணி துணைச் செயலாளா் ப.த. ஆசைத்தம்பி செய்திருந்தாா்.
தொடா்ந்து, சீா்காழியில் மதிமுக மாவட்டச் செயலாளா் ஏ.எஸ். மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி. உமாராணி, அ. அலெக்சிஸ் நிக்கோலஸ், சு.ராசேந்திரன் ஆகிய ஆசிரியா்களுக்கும் ஆசிரியச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி செயலாளா் ஆடுதுறை இரா.முருகன், மாவட்ட விவசாய சங்க தலைவா் கோ.இமயவரம்பன் ஆகியோா் விருதுகளை வழங்கினா். சீா்காழி நகர செயலாளா் எஸ்.கே. சத்யராஜ்பாலு, சீா்காழி மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆா். சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் ப.த.ஆசைத்தம்பி செய்திருந்தாா்.