கரோனா: மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் மூடல்
By DIN | Published On : 06th September 2020 12:05 AM | Last Updated : 06th September 2020 12:05 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் 3 நாள்களுக்கு மூடப்பட்டது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 3 நாள்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் ஆா். முருகானந்தம் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...