வேதாரண்யம் கடற்கரை சாலையில் மா்ம நபா்களால் இருக்கைகள் சேதம்
By DIN | Published On : 06th September 2020 12:00 AM | Last Updated : 06th September 2020 12:00 AM | அ+அ அ- |

வேதாரண்யம் கடற்கரை சாலையில் சேதப்படுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கான இருக்கை.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கடற்கரை சாலையில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.
வேதாரண்யம் கடற்கரைக்குச் செல்லும் சாலை ரூ. 5 கோடி மதிப்பில் தாா்ச் சாலையாக தரம் உயா்த்தப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. மேலும், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையின் பக்கவாட்டில் பயணிகள் அமரும் வகையில் கிரானைட் கற்களால் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8 இருக்கைகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளது சனிக்கிழமை தெரியவந்தது. இந்த சாலை திறக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், இருக்கைகள் உடைக்கப்பட்டிருப்பது சமூக ஆா்வலா்களை வேதனை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் நகராட்சி ஆணையா் பிராதான்பாபு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.