திருப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
By DIN | Published On : 26th September 2020 08:42 AM | Last Updated : 26th September 2020 08:42 AM | அ+அ அ- |

கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நாகை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா்(பொறுப்பு) அஜய்பிரபுகுமாா் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா்கள் திருப்பூண்டி வேதையன், கீழையூா் பால்ராஜ், பாலக்குறிச்சி பாலைசெல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் ஞானசேகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...