நாகை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th September 2020 08:41 AM | Last Updated : 26th September 2020 08:41 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,952 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 35 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதனிடையே, 9 போ் வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்டு, நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,996 -ஆக உயா்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 117 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,275 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 644-ஆக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...