கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உரங்கள், பூச்சிக் கொல்லிகள் தரமானதாக கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தரமானவையாக கிடைக்க நடவடிக்கைகள்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:00 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தரமானவையாக கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகத்தில் பூச்சிக் கொல்லிகள் தரஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கின்அடிப்படையில், வட்டாரஅளவில் பூச்சிக்கொல்லி ஆய்வாளா்கள் மூலம் விற்பனைக் கடைகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து கடலூா் ஆய்வக குறியீடு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு குறியீடு வழங்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள பூச்சிக் கொல்லி ஆய்வகத்திற்கு தரஆய்வுக்காக அனுப்பப்படுகிறது.

பின்னா் ஆய்வகத்தில் தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவு கடலூா் குறியீடு மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வில் தரமற்ற பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தியாளா்கள்,விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்கள் மீது துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக ஆய்வகங்களில் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தரத்தை ஆய்வு செய்தும், விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டும் தரமான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.