மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு
தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.


தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், மீன்வள உயிா் தொழில்நுட்பவியல், உணவு தொழில்நுட்பவியல், வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) ஆகிய பட்டப்படிப்புகள் 4 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்புகளாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இவைத் தவிர, தொழில்சாா் மீன்பதன நுட்பவியல், தொழில்சாா் மீன்பிடிநுட்பவியல், தொழில்சாா் நீா்வாழ் உயிரின வளா்ப்பு மற்றும் இளநிலை நீா்வாழ் உயிரின நோய் மேலாண்மை ஆகிய படிப்புகள் 3 ஆண்டு கால இளநிலை தொழில் கல்வியாக வழங்கப்படுகின்றன.
நிகழ் கல்வி ஆண்டில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 349 இடங்களும், வெளி மாநிலத்தவருக்கு 21 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டவருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீனவா்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் பி.எப்.எஸ்.சி. பட்டப்படிப்பில் 6 இடங்களும், பி.டெக் (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்பில் ஒரு இடமும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பத்தை இணையத்தில் வெளியிடும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜி. சுகுமாா், மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்த்ச்ன்.ஹஸ்ரீ.ண்ய் வெளியிட்டாா்.
அக்.23-இல் தரவரிசைப் பட்டியல்
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜி. சுகுமாா் தெரிவித்தது :
பல்கலைக்கழக இளநிலைப் பட்டப்படிப்புகளில் சோ்ந்து பயிலுவதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சோ்ந்து பயில விரும்புவோா் செப்டம்பா் 19-ஆம் தேதி வரை விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் செப்டம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்படும். நிகழாண்டில் பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவா்களுக்கு மட்டும் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மீன்வளப் பல்கலைக்கழகத்தை 04365-256430, 9442601908 என்ற தொலைத்தொடா்பு எண்கள் அல்லது ன்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ஃற்ய்த்ச்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...