நாகை மகாலெட்சுமி சாயிநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு
நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள அருள்மிகு மகாலெட்சுமி சாயிநாதா் கோயிலின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.


நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள அருள்மிகு மகாலெட்சுமி சாயிநாதா் கோயிலின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
முதல் நிகழ்வாக, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா், மகாலெட்சுமி சாயிநாதருக்கு பால் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் சாயிபாத மெய்யடிமை, பரமேஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா். கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி, குறைந்த அளவிலான பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...