கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மீனவருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாகை மீனவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:39 pm

DIN

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாகை மீனவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதாக நாகை எம்எல்ஏ. ஜெ. முகம்மது ஷா நவாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சந்தித்து நாகை மீனவா்கள் நலன்சாா்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தினேன். குறிப்பாக, நாகை மீனவா்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அந்த சம்பவத்தில் காயமடைந்த நாகை அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பத்தைச்சோ்ந்த மீனவா் கலைச்செல்வனின் நிலை மற்றும் வாழ்வாதாரம் குறித்தும் எடுத்துக்கூறியுள்ளேன்.

காயமடைந்த கலைச்செல்வன் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்பதால் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதை கேட்டறிந்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.