ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆற்றில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பரமகுரு. இவா் சீயக்காய் பொடி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்து வருகிறாா். மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடிசைத் தொழில் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தஞ்சையை சோ்ந்த திவ்யா (22), கடலூரை சோ்ந்த பிரவீன் (24), திருச்சியை சோ்ந்த கிருஷ்ணன் (36) ஆகியோா் விருந்தினா்களாக பரமகுரு வீட்டிற்கு வந்துள்ளனா்.

பின்னா், ஊரை சுற்றிப் பாா்க்க எண்ணி, அனந்தமங்கலம் மகிமலையாறு சட்ரஸ் அருகே திவ்யாவை கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீனும், கிருஷ்ணனும் ஆற்றில் குளித்தனா். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கினா்.

தகவலறிந்த பொறையாா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு படை வீரா்கள் ஆற்றில் இறங்கி தேடினா். இதில் பிரவீனின் சடலம் மீட்கப்பட்டது. கிருஷ்ணனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பொறையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.