நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக ஆற்றுப்படுத்துநா் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும், நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் (கவுன்சிலிங்) சேவை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இக்காப்பக குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்க தகுதியான ஆற்றுப்படுத்துநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆற்றுப்படுத்துநரின் ஒரு நாள் வருகைக்கு ரூ. 1,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு நன்னடத்தை அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 94868 37286, 82489 32648 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.