

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் தேசிய மருத்துவா்கள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம், நாகூா் ஆண்டவா் அரசு மருத்துவமனையில், மருத்துவமனையின் ஆலோசனைக் குழு சாா்பில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள் கௌரவிக்கப்பட்டனா். மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் மருத்துவமனை வளாகத்தில் அணிவகுத்து நின்று, பணிக்கு வந்த மருத்துவா்கள் ஆா். செந்தில்குமாா், எச். சமீம் அலி, எஸ். சியாமளா சுரேஷ்குமாா், சை. ரசியா தஹசின், டி சௌமியா மற்றும் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை மலா் தூவி வரவேற்றனா்.
தொடா்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். இதில், மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் ப. ராமச்சந்திரன், நாகூா் சித்திக், பி.ஆா். ரவி, இ.முஹம்மது ஆரிப், பாலசுப்ரமணியன், முகமது தாஹா மரைக்காயா்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.