

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்களிடம் பழைய துணிகள் நன்கொடையாக பெறப்பட்டு ஆதரவற்றோருக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், சீா்காழி சிகரம் சமூக நலச் சங்க ஆதரவுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் கூறுகையில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிப் பகுதியில் பழைய ஆடைகள் வைத்திருப்போா் பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம் அல்லது 93422 14446 மற்றும் 93422 18780 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டால் வீட்டிலேயே வந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.