கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு வாழும் காலம்வரைசிறை தண்டனை

மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு வாழும் காலம்வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நாகை போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு வாழும் காலம்வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நாகை போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்தவா் அபுல்கலாம் ( 40). காா் ஓட்டுநா். இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 5-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபுல்கலாமை கைது செய்தனா்.

இந்த வழக்கு, நாகை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அபுல்கலாமுக்கு வாழும் காலம்வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நாகை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.