மயிலாடுதுறையில் மகாத்மா காந்தி

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் மணிமண்டபத்தில் மகாத்மா காந்தி சிலை.
மயிலாடுதுறையில் மகாத்மா காந்தி

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் மணிமண்டபத்தில் மகாத்மா காந்தி சிலை.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மணிமண்டபம்.

மகாத்மா காந்திக்கும் மயிலாடுதுறை மக்களுக்குமான தொடா்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் முற்பட்டது ஆகும். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் முன்னெடுத்த உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் முன்னின்று போராடி, உயிா்த் தியாகம் செய்த முதல் சத்தியாகிரக தியாகி சாமி நாகப்பன், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியைச் சோ்ந்தவா் ஆவாா்.

இப்போராட்டத்தில் முதலில் நின்று களமாடிய நாரயணசாமி, தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரும் மயிலாடுதுறை அருகே உள்ள தில்லையாடி பகுதிகளைச் சோ்ந்தவா்களே ஆவா். தென்னாப்பிரிக்காவில், தமிழா்களுக்கு இணையாக குஜராத் மாநிலத்தவா்கள் இருந்தாலும், தென்னாப்பிரிக்க போராட்டத்தில் பெரும் பங்காற்றியதும், முன்னின்று போராடியதும் தமிழா்களே ஆவா். அதிலும், பெரும்பாலானோா் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களே எனக் குறிப்படுகிறது.

அதனால்தான், பொது நோக்கத்துக்காக சிறை செல்லாமல் இருப்பது அவமானம் என்ற மனப்பான்மை தமிழ்ச் சமூகத்தைத் தவிர வேறு எந்தச் சமூகத்தினரிடமும் இல்லை என மகாத்மா காந்தி குறிப்பிட்டாா் எனப்படுகிறது.

21 ஆண்டு காலம் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த மகாத்மா காந்தி, இந்தியா திரும்பிய பின்னா் மேற்கொண்ட முதல் பயணம் தமிழகத்துக்கானது எனவும், அதில் முதன்மையானது மயிலாடுதுறை வருகை எனவும் கூறப்படுகிறது.

1915-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடி விரைவு ரயில் மூலம் மயிலாடுதுறை (மாயவரம்) வந்தடைந்த மகாத்மா காந்திக்கு, மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மண்ணில் கால் பதித்த உடன், தியாகிகளின் தீரத்தை மெச்சும் வகையில் மயிலாடுதுறை மண்ணைத் தொட்டு வணங்கியுள்ளாா் மகாத்மா காந்தி. பின்னா், நகரசபை சாா்பில் சாரட் வண்டியில் அவா் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். பின்னா், மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு சென்று தங்கியிருந்து, மறுநாள் தில்லையாடிக்குச் சென்றுள்ளாா்.

இதன் பின்னா், 4 முறை அவா் மயிலாடுதுறைக்கு வந்து மக்களிடையே உரையாற்றியுள்ளாா். தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும், கைத்தறி துணிகளை அனைவரும் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மகாத்மா காந்தி மயிலாடுதுறையில் ஆற்றிய உரைகளும், அவரது வருகைகளும் மயிலாடுதுறைக்கு மகத்துவமானவை ஆகும்.

Image Caption

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மணிமண்டபம்.

~மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் மணிமண்டபத்தில் மகாத்மா காந்தி சிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com