90 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு
By DIN | Published On : 21st August 2021 10:51 PM | Last Updated : 21st August 2021 10:51 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில், ஒருவருக்கு நிவாரணப் பொருள்கள் தொகுப்பை வழங்கிய எஸ்.ஓ.எஸ். கிராம நிா்வாகிகள்.
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை எஸ்.ஓ.எஸ்.குழந்தைகள் கிராம வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், எஸ்.ஓ.எஸ். கிராம குடும்ப வலுவூட்டும் திட்டத்தின்கீழ், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு தலா ரூ.2,300 மதிப்பிலான உணவு தாணியங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
புதுச்சேரி ஊராட்சித் தலைவா் கோமதி ஜீவானந்தம் தலைமை வகித்தாா். எஸ்.ஓ.எஸ். கிராம இயக்குநா் எஸ்.கணேசன், உதவி கிராம இயக்குநா் எஸ்.நாராயணன் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.