பாரபட்சமின்றி குறுவைத் தொகுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 21st August 2021 10:49 PM | Last Updated : 21st August 2021 10:50 PM | அ+அ அ- |

பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
நாகை மாவட்டம், கீழையூரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்துக்கு, மாவட்டக்குழு உறுப்பினா் ஏ.நாகராஜன் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி.செல்வம் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் கீழையூா் வட்டார வேளாண் அலுவலகம் சாா்பில் நடத்தப்படும் அரசு விழாக்களில், பெரும்பாலான விவசாயிகளை புறக்கணிப்பதைக் கண்டித்தும், பாரபட்சமின்றி குறுவை சாகுபடி செய்த அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வழங்க வலியுறுத்தியும் வரும் 27-ஆம் தேதி திருக்குவளையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.