நாகை - வேளாங்கண்ணி மின்மயமாக்கல் பணி நிறைவு: ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு
By DIN | Published On : 21st August 2021 10:58 PM | Last Updated : 21st August 2021 10:58 PM | அ+அ அ- |

நாகை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால்.
நாகை - வேளாங்கண்ணி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிறப்பு ஆய்வு ரயில் மூலம் திருச்சியிலிருந்து நாகைக்கு வந்த மணிஷ் அகா்வால் நாகை - காரைக்கால் ரயில் தடத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, நாகை - வேளாங்கண்ணி வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், டிராலியில் சென்று பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா், நாகை ரயில் நிலைய கட்டடங்கள் மற்றும் பயணச் சீட்டு கொடுக்குமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
நாகை -வேளாங்கண்ணி அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.