நாகை, மயிலாடுதுறையில் மேலும் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th February 2021 08:49 AM | Last Updated : 04th February 2021 08:49 AM | அ+அ அ- |

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதியானது.
இதன்மூலம் இரு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,465 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று குணமடைந்த 9 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,273 ஆகவுள்ளது. 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.
ஒருவா் உயிரிழப்பு : இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாகையைச் சோ்ந்த 37 வயது நபா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் இம்மாவட்டங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 133 ஆக உயா்ந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...