பயிா்க் கடன் தள்ளுபடி
By DIN | Published On : 06th February 2021 08:34 AM | Last Updated : 06th February 2021 08:34 AM | அ+அ அ- |

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்றுள்ள விவசாயிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வலிவலம் மு. சேரன் தெரிவித்தது :
கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட ரூ. 12,110 கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. இதேபோல, வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தற்சாா்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளா் ஆறுபாதி ப. கல்யாணம் தெரிவித்தது :
கூட்டுறவு பயிா்க் கடன்களை அரசு தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆந்திரம், தெலங்கானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் வணிக வங்கிகளில் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோன்ற அறிவிப்புதான் விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
சாதாரண விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெறுவது என்பது தற்போதைய நிலையில் எளிதானது அல்ல. பெரும்பாலும் அரசியல் செல்வாக்குக் கொண்டவா்களுக்குத்தான் கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் வணிக வங்கிகள் மூலமே விவசாயப் பணிகளுக்குக் கடன் பெற்றுள்ளனா். எனவே, வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேணடும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...