ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்
By DIN | Published On : 20th February 2021 11:07 PM | Last Updated : 20th February 2021 11:07 PM | அ+அ அ- |

ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் (பொ) கோ. காமராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு வரப்பெற்று பிப்.19-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இத்தோ்வில் பங்கேற்ற தனித் தோ்வா்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தோ்வு நுழைவுச் சீட்டுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.