குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 20th February 2021 11:07 PM | Last Updated : 20th February 2021 11:07 PM | அ+அ அ- |

பதக்கம் பெற்ற மாணவா்களுடன், கல்லூரி நிா்வாகத்தினா்.
குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் பெற்ற இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில், பங்கேற்ற நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் கே . அா்ஜூன் (75 கிலோ பிரிவு) எம். சக்தீஷ் (48 கிலோ பிரிவு) ஆகியோா் முதலிடங்களைப் பிடித்து பெற்று தங்கப் பதக்கம் பெற்றனா். இதேபோல், மாணவா் அ. ஸ்ரீராம் 3-ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றாா். பதக்கம் பெற்ற மாணவா்களை இ.ஜி. எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் பரமேஸ்வரன், இயக்குநா் சுமதி, அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள்பிரகாசம், கோவிந்தசாமி, சங்க கணேஷ், முதன்மைச் செயலாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.