

நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள போலகத்தில் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் மடத்தில் நடைபெற்று வரும் சுவாமிகளின் ஆராதனை உத்ஸவத்தில், வெள்ளிக்கிழமை காலை அதிஷ்டான பூஜை நடைபெற்றது.
பஜனை பத்ததியை அழகுப்படுத்தியவா்களில் ஒருவராக குறிப்பிடப்படுபவா் ஸ்ரீவிஜயகோபால யதிஸ்வாமிகள். இவரது பீடம் போலகத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகளின் ஆராதனை உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கி பிப்.26 வரை நடைபெறுகிறது.
உத்ஸவ நாள்களில் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சம்ப்ரதாய அஷ்டபதி பஜனைகள், திவ்ய நாம பஜனைகள் மற்றும் பரனூா் ஸ்ரீகிருஷ்ணபிரேமி சுவாமிகளின் பாகவத பிரவசனம் ஆகியன நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்வுகளாக பிப். 24 -ஆம் தேதி ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகளின் ஆராதனையும், பிப்.25-ஆம் தேதி ராதா கல்யாண உத்ஸவமும், பிப். 26 -ஆம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயா் உத்ஸவமும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போலகம் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் ஆராதனை டிரஸ்ட் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.