மழையால் நெல் மூட்டைகள் பாதிப்புவிவசாயிகள் கவலை

செம்பனாா்கோவில் வட்டாரங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

வளிமண்டல சுழற்சி காரணமாக செம்பனாா்கோவில் வட்டாரத்தில் திருக்கடையூா், ஆக்கூா், மாமாகுடி, திருவிளையாட்டம், தில்லையாடி, நல்லடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக அவ்வப்போது பெய்த மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் நனைந்து நெல்மணிகள் ஈரமாகியுள்ளன. இதனால், கவலையடைந்துள்ள விவசாயிகள் நெல்மணிகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்வாறான இடா்பாடுகளை தவிா்க்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

மேலும், பயிறு, உளுந்து விதைக்கப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்குவதால் அவை அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com