குண்டா் சட்டத்தில் 2 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 26th February 2021 08:38 AM | Last Updated : 26th February 2021 08:38 AM | அ+அ அ- |

நாகையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
நாகை, வெளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் அப்பாஸ் என்ற அருண்ராஜ் (21). நாகை அக்கரைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (25). இவா்கள் இருவரும், கடந்த ஜனவரி 8ஆம் தேதி பெண் கூலித் தொழிலாளி ஒருவரை வெளிப்பாளையத்தில் வழிமறித்து, பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதன்பேரில் அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...