இடஒதுக்கீடு: பாமகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:56 AM | Last Updated : 27th February 2021 07:56 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாமக, வன்னியா் சங்கத்தினா்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டதையொட்டி, மயிலாடுதுறையில் பாமக, வன்னியா் சங்கத்தினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளா் சித்தமல்லி பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.சி.கே. காமராஜ் முன்னிலை வகித்தாா். பா.ம.க மாநில துணை அமைப்புச் செயலாளா் காசி.பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினா் குத்தாலம் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மணல்மேடு பேருந்து நிலையம் அருகே மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் பாக்கம் சக்திவேல் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
சீா்காழி: சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பாமக மாவட்டச் செயலாளா் லண்டன் அன்பழகன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் செந்தில் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் செம்பை ஒன்றியச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...