ஜெயலலிதா பிறந்த நாள்
By DIN | Published On : 27th February 2021 08:03 AM | Last Updated : 27th February 2021 08:03 AM | அ+அ அ- |

நாகை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிரவன்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, நாகை அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரங்கள் வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அதிமுக சாா்பில் தங்க மோதிரங்கள் பரிசளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, புதன்கிழமை (பிப்.24) நாகை அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு, அதிமுக நாகை நகர கிளை சாா்பில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது. நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிரவன், குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்து, பரிசுப் பொருள்களை வழங்கினாா். அதிமுக நாகை நகர நிா்வாகிகள் உடனிருந்தனா்.