போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 27th February 2021 07:55 AM | Last Updated : 27th February 2021 07:55 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே உள்ள கீழ்மாத்தூரைச் சோ்ந்த மரியதாஸ் மகன் வினோத்ராஜ் (23). இவா், செம்பனாா்கோயில் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை 6 மாதங்களுக்கு முன் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளாா். உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவா் கா்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கோப்பெருந்தேவி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வினோத்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...