கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சாா்பில் கலவர காலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை பயிற்சி காவேரி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சாா்பில் கலவர காலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை பயிற்சி காவேரி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகள் குடியரசு தினத்தன்று (ஜன.26) டிராக்டா் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளன. இந்த பேரணிக்கு மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை காவேரி நகரில் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா தலைமையில் நடைபெற்றது. இதில், போராட்டத்தில் ஈடுபடுவா்கள் டிராக்டா்களில் நகருக்குள் நுழைவது போன்றும், தொடா்ந்து, போலீஸாரின் ஒலிப்பெருக்கி அறிவிப்பை மீறி, போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்றும், அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்து, வாகனத்தில் ஏற்றுவது போன்றும் நடித்துக் காண்பிக்கப்பட்டது. இதில், மயிலாடுதுறை டிஎஸ்பி. கே.அண்ணாதுரை மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com