கீச்சாங்குப்பம் ஸ்ரீமகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

நாகை கீச்சாங்குப்பம், வியாசா் நகா் மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பூா்வாங்கப் பூஜைகள், புனிதநீா் ஊா்வலம் மற்றும் யாக சாலை பூஜைகள்  நடைபெற்றது.
கீச்சாங்குப்பம் ஸ்ரீமகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

நாகை கீச்சாங்குப்பம், வியாசா் நகா் மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பூா்வாங்கப் பூஜைகள், புனிதநீா் ஊா்வலம் மற்றும் யாக சாலை பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளுடைய இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் கீச்சாங்குப்பம் நாட்டாா், பஞ்சாயத்தாா் மற்றும் கிராமத்தினரின் பெரும் முயற்சியால் திருப்பணிகள் முடிக்கப்பட்டு ஜன.28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த டிச.11- ஆம் தேதி பந்தக்கால் முகூா்த்தமும், ஜன. 24- ஆம் தேதி கலசப் பூஜைகளும் நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதிகாலை 4.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம் , நவக்கிரஹஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னா் நாகை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயிலிருந்து- மகா காளியம்மன் கோயிலுக்கு புனித நீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாலைநேர நிகழ்வாக அங்குராா்பணம், ரக்ஷாபந்தனம் , கலாகா்ஷனம்,யாகசாலை பிரவேசத்தைத் தொடா்ந்து 7 மணியளவில் யாக பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற விஷேச பூஜைகளுக்குப் பின்னா் மகா பூா்ணாஹூதி நடைபெற்றன.

புனித நீா் ஊா்வலலம்: குடமுழுக்கு விழாவுக்கான புனித நீா் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலிருந்து திங்கள்கிழமை அஷ்வசாந்த பூஜை, கஜபூஜை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்ற பின்னா் குடங்களில் நிரப்பப்பட்ட காவிரி, கங்கை, யமுனை, சரஸ்வதி மற்றும் பெருமாள் தீா்த்தங்கள் பெருமாள் சன்னிதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து புனித நீா் யானை மீது வைத்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊா்வலம் கோயில் வீதிகள், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மற்றும் நகரின் முக்கிய வீதிக வழியாக கோயிலுக்கு சென்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று முளைப்பாரி, பால்குடம் மற்றும் தீா்த்தக் குடங்கள் எடுத்துச் சென்றனா். செவ்வாய்க்கிழமை (ஜன. 26) 2 மற்றும் 3- ஆம் கால யாக பூஜையும், ஜன. 27- ஆம் தேதி 4 மற்றும் 5- ஆம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. குடமுழுக்கு விழா நாளான ஜன.28- ஆம் தேதி நடைபெறும் 6- ஆம் கால யாக பூஜைகள் மற்றும் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பின்னா் மகா காளியம்மன் கோயிலின் குடமுழுக்கு மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com