திருக்கடையூா் ஆணைக்குளம் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் 16 ஆம் ஆண்டு தைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் திருக்கடையூா் மஞ்சள் ஆற்றங்கரையில் இருந்து கரகம் மற்றும் பால்குடங்களுடன் கோயிலுக்கு ஊா்வமாக வந்தனா். பிறகு, அம்மனுக்கு பால், தேன், தயிா், மஞ்சள், விபூதி, குங்குமம், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.