

பாஜக மூத்த தலைவா் சியாம பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாள் விழா மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை நகர பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பாஜக நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் முன்னிலை வகித்தாா். இதில், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சியாம பிரசாத் முகா்ஜியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாநில இளைஞரணி பொதுக்குழு உறுப்பினா் வினோத், மாவட்ட இளைஞரணி தலைவா் பி.பாரதிகண்ணன், நகர பொதுச் செயலாளா்கள் செல்வகுமாா், சதீஸ்சிங் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.