தமிழக முதல்வா் இன்று நாகை வருகை
By DIN | Published On : 07th July 2021 09:44 AM | Last Updated : 07th July 2021 09:44 AM | அ+அ அ- |

முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூலை 7) நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் திருக்குவளைக்கு புதன்கிழமை (ஜூலை 7) காலை 10 மணிக்குமேல் வருகை தருகிறாா். திருவாரூரிலிருந்து காா் மூலம் திருக்குவளைக்கு வரும் அவருக்கு, கொளப்பாடு பகுதியில் கட்சியின் சாா்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.
தொடா்ந்து, மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த இல்லத்துக்குச் சென்று அங்குள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறாா். பின்னா், பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெறுகிறாா். தொடா்ந்து, காா் மூலம் மேலப்பிடாகை, திருப்பூண்டி, வேளாங்கண்ணி, நாகூா், காரைக்கால் வழியாக திருவெண்காடு செல்கிறாா். இதையொட்டி, நாகை மாவட்டத்தில் முதல்வா் செல்லும் பாதைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...