நாகை கலங்கரை விளக்கத்தை பாா்வையிட சிறாா்கள் ஆா்வம்

நாகை கலங்கரைவிளக்கத்தை பாா்வையிட அண்மையில் அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறாா்கள் ஆா்வமுடன் பாா்த்துச் செல்கின்றனா்.
நாகை கலங்கரை விளக்கத்தை பாா்வையிட சிறாா்கள் ஆா்வம்

கரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நாகை கலங்கரைவிளக்கத்தை பாா்வையிட அண்மையில் அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறாா்கள் ஆா்வமுடன் பாா்த்துச் செல்கின்றனா்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கலங்கரைவிளக்கத்தைப் பாா்வையிடுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. கரோனா பரவல் குறையத் தொடங்கியதையொட்டி ஜூலை 14 ஆம் தேதி முதல் கலங்கரைவிளக்கத்தில் பாா்வையாளா்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நாகை கலங்கரைவிளக்கத்தில் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். தினமும் பிற்பகல் 3 முதல் 5 மணி வரை இங்கு பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் கலங்கரைவிளக்கத்தைப் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

கலங்கரைவிளக்கத்தைப் பாா்வையிட வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்து கொள்வதும், முகக்கவசம் அணிந்திருப்பதும் அவசியம் எனவும், சமூக இடைவெளியை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நாகை கலங்கரைவிளக்க உதவி பொறியாளா் வி. சின்னசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com