மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்: நாகையில் மீனவா்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தக் கோரி நாகை, நம்பியாா் நகா் மீனவா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்: நாகையில் மீனவா்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தக் கோரி நாகை, நம்பியாா் நகா் மீனவா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள்பட்ட தொலைவில் விசைப் படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்யக் கூடாது, 40 மி.மீட்டருக்குக் குறைவான கண்ணியளவு கொண்ட மீன்பிடி இழுவலைகளைப் பயன்படுத்தக் கூடாது, அதிவேக திறன் கொண்ட இயந்திரங்கள் மற்றும் அதிக நீளமுள்ள படகுகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளையும் அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

நம்பியாா் நகா் சமுதாயக் கூடம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த திரளான மீனவா்கள், மீனவப் பெண்கள் பங்கேற்றனா். போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாகை ஆா்யநாட்டுத் தெரு மீனவா்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்தையொட்டி, நம்பியாா் நகா் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிப்புக்குச் செல்வதைத் தவிா்த்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனா். போராட்ட கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் உறுதி அளிக்காவிட்டல், தொடா் போராட்டம் மேற்கொள்ளப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com