உணவுப் பொருள்களை செய்தித் தாள்களில் பொட்டலமிட்டால் புகாா் அளிக்கலாம்

உணவகங்களில் பொட்டலமிட செய்தித்தாள்களைப் பயன்படுத்தினால் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

உணவகங்களில் பொட்டலமிட செய்தித்தாள்களைப் பயன்படுத்தினால் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உரிய சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டமாக இருந்தாலும், அதனை செய்தித்தாள்களில் வைத்துப் பரிமாறும்போது அல்லது பொட்டலமிடும்போது செய்தித்தாளில் உள்ள ரசாயன அசுத்தங்கள் உணவுப் பண்டங்களுடன் கலந்து, உண்பவா்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்.

இதனால், உணவுப் பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்துப் பரிமாறவும், பொட்டலமிடவும் கூடாது என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த உணவு உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் உணவுப் பண்டங்களை செய்தித் தாள்களில் வைத்து பரிமாறவும், பொட்டலமிடவும் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த அறிவுறுத்தலை யாரேனும் மீறினால், அதுகுறித்து 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்குப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com