குத்தாலம்: வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 26th July 2021 09:02 AM | Last Updated : 26th July 2021 09:02 AM | அ+அ அ- |

குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் திருவாலங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (62). இவா், திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறாா். அருகில் உள்ள திருக்கோடிக்காவல் கிராமத்தில் வசித்துவரும் இவரது தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை பாா்க்க தனது மனைவியுடன் ராஜேந்திரன் சனிக்கிழமை சென்றாா்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 34 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 3,000 பணம், ஏடிஎம் காா்டு போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, குத்தாலம் காவல்நிலையத்தில் ராஜேந்திரன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா். முன்னதாக, விரல் ரேகை நிபுணா்கள் திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை பதிவு செய்தனா்.