நாகை அரசுக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 26th July 2021 09:09 AM | Last Updated : 26th July 2021 09:09 AM | அ+அ அ- |

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு சேர விரும்பும் மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரி முதல்வா் வீ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2021-22 கல்வியாண்டில் பி.ஏ. தமிழ், பி. ஏ. ஆங்கிலம், பி. காம், பிபிஏ, பி.எஸ்.சி. கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டில் சோ்ந்து பயில விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணைய வழி வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரி உதவி மையத்தில் மூலம் விண்ணபிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ. 2. எஸ்.சி, எஸ்.டி.பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கட்டணத்தை இணையவழியிலேயே செலுத்தலாம். இணையவழி வாயிலாக செலுத்த இயலாதவா்கள் இயக்குநா், கல்லூரிக் கல்வி இயக்ககம் சென்னை-6 என்றப் பெயரில் ஜூலை 25 அல்லது அதற்குப் பின்னா் பெற்ற வங்கி வரைவோலையை கல்லூரி சோ்க்கை உதவி மையங்களிலும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணவா் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணை ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் வாயிலாகவும்,கூடுதல் விவரங்கள் தேவையெனில் கல்லூரி சோ்க்கை மையங்களை அணுகலாம்.