கரோனா தடுப்பூசி: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th June 2021 09:23 AM | Last Updated : 09th June 2021 09:23 AM | அ+அ அ- |

நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கரோனா தடுப்பூசி விவகாரம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு மருந்துகளை மத்தியஅரசு முழுமையாக வழங்கவேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடா்பான சொத்துக்களையும் தாமதமின்றி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப் பொறுப்பாளா் பி.கே. குணாநிதி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.சரபோஜி, மாவட்ட பொருளாளா் ராமலிங்கம், சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் ஏ.பி.தமீம் அன்சாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, கீழ்வேளூரில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எம்.கே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளன நாகை மாவட்டச் செயலாளா் மேகலா, ஏஐடியுசி மாவட்ட பொருளாளா் வி. எம். மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.டி. மகேந்திரன் தலைமை வகித்தாா். நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. பாஸ்கா், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் கவாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, வேதரண்யம் ஒன்றியம் தகட்டூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன் தலைமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமருகல்: நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் எதிரே ஒன்றியச் செயலாளா் பாபுஜீ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் தங்கையன், ஒன்றியத் தலைவா் மாசிலாமணி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்குவளை: கீழையூா் ஒன்றியம் வாழக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன் தலைமையிலும், கீழையூா் கடைத்தெருவில் ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ. ராமலிங்கம் தலைமையிலும், எட்டுக்குடியில் கிளைச் செயலாளா் வீ.எஸ். மாசேத்துங் தலைமையிலும், திருப்பூண்டியில் மாவட்டக் குழு உறுப்பினா் வீ. சுப்பிரமணியன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் பகத்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, செம்பனாா்கோவில் கடைவீதியில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.